உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கான பேச்சு திடீரென இடைநிறுத்தம்!

இலங்கை செய்திகள் 47 நிமிடங்கள் முன்
73 பார்வைகள்

இலங்கை மற்றும் இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் 25ஆம் திகதி இந்தியாவில் நடைபெறவிருந்த இரு தரப்புப் பேச்சு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுகின்றமை மற்றும் கைது செய்யப்படுகின்றமை தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முகமாக, இந்தியாவில் நாளைமறுதினம் (25) நடைபெறவுள்ள பேச்சில் பங்கேற்பதற்காக இலங்கைக் தரப்பிலிருந்து அதிகாரிகள் இந்தியா பயணமாகவுள்ளனர் என்று மீன்பிடி அமைச்சர் இ. சந்திரசேகர் இம்மாத ஆரம்பத்தில் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

எனினும், குறிப்பிட்ட நாளான நாளைமறுதினம் இவ்வாறான பேச்சு எதுவும் இடம்பெற மாட்டாது என்று தற்போது இந்தியத் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியத் தரப்பால் விடுக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு அல்லது பேச்சு இடைநிறுத்தம் தொடர்பில், இலங்கைக் தரப்பிலிருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரபூர்வமான கருத்துக்களும் அல்லது விளக்கங்களும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியை மின்னேரியாவில் சட@லமாக மீட்பு!

வவுனியா – கோவில்குளம் இந்துக் கல்லூரி ஆசிரியரும், கலை இலக்கிய ஆர்வலருமான செல்வி வனிதா சேனாதிராஜா (வயது 41) பொலனறுவை, மின்னேரியா பகுதியில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…

78 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவத்தில் பிரதான சூத்திரதாரிகளைக் கண்டறிந்தால் மட்டுமே முழு நீதி கிடைக்கும்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் சதித்திட்டம் தீட்டியவர்களுக்கும், அதற்கு உதவி புரிந்தவர்களுக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து கொழும்பு பேராயர் இல்லம் தனது மனநிறைவை…

66 0 0
இலங்கை செய்திகள்

இது ஜனநாயகத்தின் கொ@லைகார அரசு – சஜித் கடுமையாகச் சாடல்

சமூக ஒப்பந்தம் மற்றும் முறைமை மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, 22ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் ஊடாக நீதிமன்றத்தின் சுதந்திரத்தைச் சீரழித்து, ஜனநாயகத்திலிருந்து சர்வாதிகாரத்தை…

70 0 0
இலங்கை செய்திகள்

பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

இலங்கையின் நீண்டகால வரலாற்றைக் கொண்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக புதிய சட்டக் கட்டமைப்பை அறிமுகப்படுத்தும் வகையில் “பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் சட்டமூலம்”…

65 0 0