உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பயண அனுமதிக்காக காத்திருக்கும் கப்பல்கள்.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
64 பார்வைகள்

ஹோர்முஸ் ஜலசந்தியில் பயண அனுமதிக்காகக் காத்திருக்கும் கப்பல்களின் படங்களை ஈரானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.பயண அனுமதிக்காக பல கப்பல்கள் காத்திருப்பதை ஒரு பயணிகள் விமானத்திலிருந்து காணொளியாகப் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.

அந்தக் காணொளியில் ஹோர்முஸ் ஜலசந்தியிலும் அதைச் சுற்றியும் டஜன் கணக்கான கப்பல்களும் எண்ணெய்க் கப்பல்களும் சிக்கித் தவிப்பதை அவதானிக்க முடிகின்றது.

எண்ணெய்க் கப்பல்கள், திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மற்றும் சரக்குக் கப்பல்கள் உள்ளிட்ட ஏராளமான கப்பல்கள், ஹோர்மூஸ் ஜலசந்திக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் நங்கூரமிட்டு தேங்கி நிற்கின்றன.

அவற்றில் பலவற்றால் முன்னோக்கி நகரவோ அல்லது வளைகுடாவை விட்டு வெளியேறவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ஈரான் – அமெரிக்கா போர் ஒரு மாதத்தை எட்டிய நிலையில் பல பாதிப்புக்களை பல நாடுகள் எதிர்கொண்டுள்ளன.

இந்த நிலையில் ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்து செல்லும் கப்பல்கள் ஈரானிடம் அனுமதி கோர வேண்டும் என்றும் கப்பல்கள் கடந்து செல்வதற்கு சுங்க வரி செலுத்தினாலே கப்பல்களை செல்ல அனுமதி வழங்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0