உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

எரிபொருள் விலை உயர்வால் நியூசிலாந்து – அவுஸ்திரேலியா இடையிலான விமானச் சேவைகள் பாதிப்பு.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
43 பார்வைகள்

மத்திய கிழக்கில் தொடரும் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரிப்பதைக் குறிப்பிட்டு, சில உள்நாட்டுச் சேவைகள் மற்றும் அவுஸ்திரேலியா – நியூசிலாந்து இடையிலான விமானப் பயணங்களை ரத்து செய்ததற்காக ஜெட்ஸ்டார் நியூசிலாந்து மன்னிப்பு கோரியுள்ளது.

மே மாதத்தில் 12% விமானங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.குறிப்பாக ஒக்லாந்து, கிறைஸ்ட்சர்ச், வெலிங்டன், சிட்னி மற்றும் பிரிஸ்பேன் ஆகிய முக்கிய நகரங்களுக்கு இடையிலான பயணங்கள் இதில் அடங்கும்.

பாதிக்கப்பட்ட பெரும்பாலான பயணிகளுக்கு அதே நாளில் மாற்று விமானங்கள் வழங்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் கூறியுள்ளது.

இது குறித்துப் பேசிய செய்தித் தொடர்பாளர் ஒருவர், “மத்திய கிழக்கு மோதல் மற்றும் பிற செலவுகள் அதிகரிப்பால் ஏற்பட்ட விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக, எமது கால அட்டவணையில் சில தற்காலிக மாற்றங்களைச் செய்துள்ளோம்.

இதனால் ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துவதோடு, வாடிக்கையாளர்களின் புரிதலுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0