உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மேற்காசியாவுக்கு கூடுதல் படைகள் – ட்ரம்ப் முடிவு.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
39 பார்வைகள்

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில், மேற்காசிய நாடுகளுக்கு தொடர்ந்து அமெரிக்க படையினர் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் கிட்டத்தட்ட ஒரு மாதத்தை நெருங்கி விட்டது. ஈரான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மேற்காசிய நாடுகளுக்கு சுமார் 1,000 இராணுவ வீரர்களை அமெரிக்கா அனுப்பி வைக்க உள்ளது. இதனிடையே, போர் நிறுத்தம் தொடர்பாக 15 அம்சங்களுடன் அமைதி திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்மொழிந்துள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் அடங்கிய குழு, ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

இந்நிலையில், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தவே ஈரான் விரும்புவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கச் சிறப்புத் தூதர்களான ஸ்டீவ் விட்காப் மற்றும் ஜாரெட் குஷ்னரை விட, ஜேடி வான்ஸ் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் அதிக ஆர்வம் காட்டுவதாக ஈரான் நம்புகின்றது.

இதனிடையே, ஹோர்முஸ் நீரிணையை, ஈரான் தனது நிபந்தனைகளுக்கு உட்பட்டு பயன்படுத்த அனுமதிப்பதாகத் தெரிவித்துள்ளது. ஈரான் அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் தங்கள் நாட்டுக்கு எதிராகச் செயல்படாத நாடுகளுக்கு சொந்தமான கப்பல்களை மட்டும், இந்தக் கடல்வழியை பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0