உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சட்டச் சிக்கல்களை நீக்கி கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிக்க ஜனாதிபதி உத்தரவு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
28 பார்வைகள்

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிப்பதில் நடக்கும் சட்டச் சிக்கல்களை நீக்கும் நோக்கில், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் நியமிக்கப்பட்ட குழு சந்திப்பு நடைபெற்றது.

இதில், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை சமூக நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் விரைவாக அழிப்பதின் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார். இதற்காக நடவடிக்கைகளுக்கான முறையான செயன்முறையை உடனடியாகத் தயாரிக்குமாறு அவர் கூறினார்.
சட்டத் திருத்த வரைவு முன்பே தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, அதில் குறிப்பிடப்பட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில், அழிப்பதற்கான காலத்தை குறைக்கும் வழிகளும், நீதிமன்றம், பொலிஸ் மற்றும் அரச பகுப்பாய்வுத் திணைக்களம் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களும் பரிசீலிக்கப்பட்டது.

கடத்தல்காரர்கள் தப்பிச் செல்வதை தடுக்கும், வழக்குத் தடயங்கள் மீண்டும்சமூகத்திற்குள் செல்வதைத் தடுக்குமாறு சட்டத் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.இது தொடர்பில் பிரதிப் சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் ஜயவீர, பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய உள்ளிட்ட அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

நீதியும் தேசிய ஒருமைப்பாட்டும் அமைச்சின் ஹர்ஷன நாணயக்கார, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பிரதிப் பொலிஸ் அதிகாரிகள், அரச பகுப்பாய்வுத் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக மக்களின் பிரதிநிதி மாத்திரமே என்பதை…

1 0 0
இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

34 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

31 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும்.!

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்…

61 0 0