உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

உரங்களை எவ்விதப் பற்றாக்குறையுமின்றி வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
27 பார்வைகள்

இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் விவசாய அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் உர இறக்குமதி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

நாட்டின் மற்றும் மக்களின் உணவுப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்குமாறும் விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை எவ்விதப் பற்றாக்குறையுமின்றி வழங்குமாறும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஆலோசனை வழங்கியிருந்தார்.

பாதுகாப்பான கையிருப்பைப் பேணுவதற்காக கொழும்பில் உள்ள சேமிப்புக் கிடங்குகளை மேம்படுத்துதல் மற்றும் உர இறக்குமதிக்குக் கடன் வசதிகளை வழங்குதல் போன்ற, விடயங்கள் இதன்போது விவாதிக்கப்பட்டன.


2026ஆம் ஆண்டில் 1.5 மில்லியன் ஹெக்டேர் நெல் வயல்களில் செற்செய்கை பண்ணுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே இதற்கு மொத்தமாக 1 லட்சத்து 25 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா தேவைப்படும் என அதிகரிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

எனினும் கடந்த முதலாம் திகதி 1 லட்சத்து 2ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா கையிருப்பில் இருந்ததாகவும், ஆனால் அதில் சுமார் 27ஆயிரம் மெட்ரிக் டன் கடந்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் வெளியிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 17ஆம் திகதி நிலவரங்களின் அடிப்படையில், நிறுவனங்களிடம் 68 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா மட்டுமே மீதமுள்ளதாகவும் இங்கு கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேவையான மீதமுள்ள உர இருப்புகளை இறக்குமதி செய்வது மற்றும் அடுத்த 03 மாதங்களுக்குத் தேவையான உர இருப்புகளை முறையான மேலாண்மையுடன் பராமரிப்பது குறித்த திட்டங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன.


இதேவேளை நெல் மற்றும் காய்கறிகள் போன்ற குறுகிய காலப் பயிர்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.கடந்த காலத்தில் தங்களுக்குச் சேர வேண்டிய பணம் கிடைக்காததால் நிறுவனங்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் தொடர்hபகவும் உர நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்திருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

29 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும்.!

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்…

61 0 0
இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

51 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

50 0 0