உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
17 பார்வைகள்

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரும் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளன.

இணையவழியிலான விண்ணப்பங்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரிகள் www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஆகிய இணையத்தளங்களுக்குச் பிரவேசித்து வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமையத் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பாடசாலை விண்ணப்பதாரிகள் தமது பாடசாலை அதிபர்கள் ஊடாகவும், தனியார் விண்ணப்பதாரிகள் தமக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தித் தாமே நேரடியாகவும் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி எக்காரணம் கொண்டும் நீடிக்கப்பட மாட்டாது என்பதால், உரிய காலத்திற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 1911 என்ற துரித தொலைபேசி இலக்கம் அல்லது 0112785922 போன்ற இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

29 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும்.!

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்…

61 0 0
இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

51 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

51 0 0