இந்திய பாரம்பரிய நெல் இனங்கள் யாழில் அறுவடை.!
இந்தியாவில் பழமையான காலங்களில் மன்னர்களால் பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய நெல் இனங்கள் யாழ்ப்பாணத்தில் முதன்முறையாகப் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் கறுப்பு கவணி, மாப்பிள்ளை சம்பா மற்றும் கருஇழை போன்ற நெல் இனங்கள் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு பயிரிடப்பட்டன. அவை நேற்று அறுவடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று வயலில் பொங்கல் விழா நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பாரம்பரிய முறையில் நிலம் மீண்டும் உழப்பட்டு சிறுதானிய வகையான பயறு விதைக்கப்பட்டது. பின்னர் கலந்து கொண்டவர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.மேலும், யாழ்ப்பாணத்தில் உள்ளஇந்திய துணைத் தூதரகத்தின் மூலம் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்களும் வழங்கப்பட்டன.
கலாநிதி சிதம்பரமோகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்திய துணைத் தூதுவர் சாய்முரளி, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் மற்றும் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.மேற்குறித்த நெல் இனங்கள் இலங்கையில் முதன்முறையாகப் பயிரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
