உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்க மின் பிறப்பாக்கிகளை தாக்குவோம் – ஈரான் எச்சரிக்கை.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
37 பார்வைகள்

டொனால்ட் ட்ரம்ப்பின் ஈரான் மீதான ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்கான காலக்கெடு அண்மித்து வரும் நிலையில், ஈரானானது, இன்று (23) அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு மின்சாரத்தை விநியோகிக்கும் மத்திய கிழக்கு மின் பிறப்பாக்கிகளை தாக்குவோம் என ஈரான் அறிவித்துள்ளது.

ஈரானிய துணை இராணுவ புரட்சிகர படையின் இவ் அறிவித்தலானது, ஈரானின் பிந்தைய தாக்குதல்கள் பற்றிய விளக்கமாக அமைந்துள்ளது.ஈரானிய தொலைக்காட்சியொன்று இது தொடர்பில் தெரிவித்ததாவது,

“எங்களுடைய மின்பிறப்பாக்கிகள் தாக்குதலுக்கு உட்பட்டால் அமெரிக்க தளங்களுக்கு மின்சாரத்தை விநியோகிக்கும் பிராந்திய மின் பிறப்பாக்கிகளை தாக்குவோம்.

அத்துடன் அமெரிக்க சார்பான பொருளாதார, கைத்தொழில் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளையும் தாக்குவோம். இது இஸ்ரேலுக்கும் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சந்தேகம் எதுவும் வேண்டாம். நாங்கள் நிச்சயம் இதனை மேற்கொள்வோம்.

ஹோர்முஸ் நீரிணை 48 மணித்தியாலத்தின் பின்னரும் மூடப்பட்டிருந்தால் ஈரானிய மின் பிறப்பாக்கிகள் மீது இலக்குவைத்து தாக்குவோம் என நேற்று (22) டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0