உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளை மக்கள் பார்வையிட விரைவில் படகு சேவை

இலங்கை செய்திகள் 59 நிமிடங்கள் முன்
71 பார்வைகள்

உலக சுற்றுலா தின விழாவையொட்டி மன்னார் மாவட்டத்தில் முக்கியமான ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளையும் பார்ப்பதற்குரிய ஏற்பாடுகளும், அதற்கான வெள்ளோட்ட நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இடம் பெற உள்ள உலக சுற்றுலா தின விழா தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று (23) மாலை மன்னார் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன் பங்கேற்புடன் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.குறித்த கலந்துரையாடலில் அழைக்கப்பட்ட திணைக்கள பிரதி நிதிகள் கலந்து கொண்டதோடு,ஏற்பாடுகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

குறித்த கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

இலங்கை வரலாற்றில் மிகவும் வரலாற்று ரீதியாக ஒரு முதன்மையான வரலாற்றைக் கொண்ட மன்னார் தீவின் உல்லாசப் பயணத்துறை யை வளர்க்கும் நோக்கத்தோடு, வடமாகாண சுற்றுலா பணியகமும், மாவட்ட செயலகம், நகர சபை போன்ற திணைக்களங்கள் இணைந்து, மன்னார் மாவட்டத்தில் செப்டம்பர் 27ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள உலக உல்லாசப் பயண தினத்தை இம்முறை மன்னார் மாவட்டத்தில் கொண்டாடுவதற்கு தீர் மானித்திருக்கின்றோம்.

உண்மையில் மன்னார் மாவட்டத்தில் 80க்கும் மேற்பட்ட சுற்றுலா இடங்கள் அடையாளம் காண பட்டிருக்கிறது. அந்த அடையாளங்களில் ஒன்றான கீரி பீச்சை மையமாகக் கொண்டு, இந்த வருடத்துக்குரிய உல்லாசப் பயண தினங்கள் மூன்று நாட்கள் 25ஆம், 26ஆம், 27ஆம் திகதிகளில் மன்னார் மாவட்டத்தில் கொண்டாடப்பட இருக்கிறது.

உண்மையில் இந்த சுற்றுலா தின நிகழ்விலே, மன்னார் மாவட்டத்தின் கலாச்சார பாரம்பரிய மரபுரிமை அம்சங்களைப் பேணும் வகையில், மன்னார் மாவட்டத்திற்கே சிறப்பான பாரம்பரிய உணவு முறைகளை மக்களுக்கு காட்சிப்படுத்தி, அதை மக்களுக்கு பரிமாறி, மற்றும் வெளி மாவட்டங்கள், சர்வதேச ரீதியில் இருந்து வருகின்ற உல்லாசப் பயணிகளுக்கும் அதை அறிமுகப்படுத்தும் வகையில் ஒரு பாரம்பரிய உணவுத் திருவிழா அமைப்பும் இந்த நிகழ்வில் ஒரு முக்கியமான இடமாக காணப்படுகிறது.

அதனை விட மன்னார் மாவட்டத்திற்கே முதன்மையான பல கலாச்சார அம்சங்கள் காணப்படுகிறது. எனவே அந்த மன்னார் மாவட்டத்திற்கு உரித்தான பண்பாட்டு அம்சங்களை வெளிக்கொணரும் முகமாக நாட்டியங்கள், வில்லுப்பாட்டு , அதேபோன்று மன்னார் மாவட்டத்தில் நான்கு மதத்தவர்கள் மிகவும் சமாதானமான முறையில் வாழ்கின்றார்கள் .

எனவே அந்த மதத்தினரின் அடையாளங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான கலை அம்சங்களின் வகையிலே பல்வேறுபட்ட கலாச்சார பண்பாட்டு விழாக்களும் அன்றைய தினத்தில் மன்னார் மாவட்டத்தில் அலங்கரிக்கப்பட இருக்கிறது.

இதை விட மன்னார் மாவட்டத்திற்கு உரித்தான பல சிறப்பான விளையாட்டு விழாக்களும் இங்கே இந்த உல்லாசப் பயணத்துறை யை வளர்க்கும் நோக்கில் மக்கள் பார்வைக்காக கொண்டாடப்பட இருக்கிறது.

25 ஆம் திகதி பட்டப் போட்டிகளும், 26திகதி கடற்கரைப் பந்தாட்டம், கயிறு இழுத்தல் போட்டி நிகழ்வுகளும், அதேபோன்று 27ஆம் திகதி மாலை 4 மணிக்கு கபடிப் போட்டிகளும் என்ற வகையிலே பல்வேறுபட்ட அம்சங்கள் இடம்பெற இருக்கின்றது.

உண்மையில் மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரை, இம்முறை கொண்டாடப்படுகின்ற இந்த உல்லாசத் தின நிகழ்வு ஒரு மிகவும் மன்னார் மாவட்டத்தில் ஒரு அபிவிருத்திப் பாதையிலே முன்னோக்கி ஒரு உச்ச நிலைக்கு எடுத்துக்கொண்டு செல்லும் நிகழ்வாக நாங்கள் இதை பயன்படுத்த வேண்டும்.

எனவே மன்னார் மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதில் ஆர்வம் உள்ள அனைத்து மக்களும், நலன் விரும்பிகளும் இந்த நிகழ்வில் ஆர்வத்துடன் பங்கெடுத்து, மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு தங்களாலான ஒத்துழைப்பு களையும் இந்த சமயத்திலே நாங்கள் வரவேற்கின்றோம்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து திணைக்களங்களின் பங்குபற்றுதலுடன் ,குறிப்பாக முப்படையினர், பொலிஸார் மற்றும் சுகாதாரத் துறையினர், அதேபோன்று அனைத்து திணைக்களங்களின் பங்குபற்றுதலோடு — இந்த நிகழ்வு, மூன்று நாள் நிகழ்வு நடைபெற இருப்பது ஒரு முக்கியமான அம்சமாக காணப்படுகிறது.

எனவே இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் அவர்களும், அதேபோன்று இரண்டாம் நாள் வடமாகாண செயலாளர் அவர்களும், மூன்றாம் நாள் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வுகள் சிறப்பான முறையில் இடம் பெற இருப்பதால், அனைத்து பொது மக்களையும், அதேபோன்று சுற்றுலா பயணிகளையும் இந்த நிகழ்வுக்காக வரவேற்கின்றோம்.

மன்னார் மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை ஒரு பெரிய ஒரு முன்னேற்றகரமான நிலைக்கு கொண்டு செல்லும் வகையில், மன்னார் மாவட்டத்தின் ஒரு முக்கியமான ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டு களையும் பார்ப்பதற்குரிய ஏற்பாடுகளும், அந்த வெள்ளோட்ட மாக அந்த நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கான நிகழ்வுகளும் அன்றைய தினம் இடம்பெற இருக்கின்றது.

அதனுடன் இணைந்த வகையில் வெகுவிரைவில் பயணிகளும் உல்லாசப் பயணிகளும் அந்த இடத்தைத் தேடி பார்ப்பதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட இருக்கிறது.

எனவே அது ஒரு நல்லதொரு அடையாளமாக பார்க்கப்படுகிறது.எனவே இப்படிப்பட்ட ஒரு முன்னேற்றகரமான செயல்பாடுகளில் அனைவரையும் பங்குபற்றுமாறு அன்பாக வரவேற்று நிற்கின்றோம்.என அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவத்தில் பிரதான சூத்திரதாரிகளைக் கண்டறிந்தால் மட்டுமே முழு நீதி கிடைக்கும்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் சதித்திட்டம் தீட்டியவர்களுக்கும், அதற்கு உதவி புரிந்தவர்களுக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து கொழும்பு பேராயர் இல்லம் தனது மனநிறைவை…

58 0 0
இலங்கை செய்திகள்

இது ஜனநாயகத்தின் கொ@லைகார அரசு – சஜித் கடுமையாகச் சாடல்

சமூக ஒப்பந்தம் மற்றும் முறைமை மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, 22ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் ஊடாக நீதிமன்றத்தின் சுதந்திரத்தைச் சீரழித்து, ஜனநாயகத்திலிருந்து சர்வாதிகாரத்தை…

65 0 0
இலங்கை செய்திகள்

பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

இலங்கையின் நீண்டகால வரலாற்றைக் கொண்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக புதிய சட்டக் கட்டமைப்பை அறிமுகப்படுத்தும் வகையில் “பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் சட்டமூலம்”…

59 0 0
இலங்கை செய்திகள்

விடுதி ஒன்றில் சுற்றிவளைப்பு; நால்வர் கைது.!

திருகோணமலை உவர்மலை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் தொழில் நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி சுற்றிவளைப்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

81 0 0