தெஹ்ரானில் பாரிய வெடிப்புச் சத்தங்கள் – தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்.!
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இன்று (23) அதிகாலையில் பாரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேவேளை ஈரானிய தலைநகரின் ஐந்து பகுதிகளில் வான்வழித் தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.சேதம் தொடர்பிலான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என பதிவிட்டுள்ளது.
இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “தெஹ்ரானில் உள்ள ஈரானிய பயங்கரவாத ஆட்சியின் உட்கட்டமைப்புகளைக் குறிவைத்து பரந்த அளவிலான தாக்குதல்களை நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது.ஈரானின் தலைநகரில் வெடிப்புச் சத்தங்கள் நிகழ்ந்ததாக வந்த செய்திகளைத் தொடர்ந்து இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.