போருக்கு தேவையான நிதி ஏராளமாக உள்ளது – அமெரிக்க நிதியமைச்சர்.!
இஸ்ரேல், அமெரிக்கா – ஈரான் போர் இன்றுடன் 24 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க இராணுவ தலைமையகம் (பென்டகன்) ஈரான் போருக்கு கூடுதலாக 200 பில்லியன் டொலர் நிதி தேவை என கோரிக்கை விடுத்துள்ளமை பேசுபொருளானது.
இந்நிலையில், ஈரானுக்கு எதிரான போருக்குத் தேவையான நிதி அமெரிக்காவிடம் தாராளமாக உள்ளதாகவும் இதற்காக அமெரிக்கா மக்கள் மீது கூடுதல் வரிகள் விதிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லையெனவும் போர்ச் செலவுகளை அமெரிக்காவால் எளிதாகச் சமாளிக்க முடியும் எனவும் அமெரிக்க நிதியமைச்சர் ஸ்கொட் பெசென்ட் அறிவித்துள்ளார்.