உக்ரைனுக்கு ரூ.9 ஆயிரம் கோடி இராணுவ உதவிகளை வழங்கும் ஸ்பெயின்.!
ரஷ்யாவுடன் போருக்கு ஈடுபட்டுள்ள உக்ரைனுக்கு ஸ்பெயின் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி (100 கோடி யூரோ) மதிப்பிலான புதிய இராணுவ உதவிகளை வழங்க முனைந்துள்ளது.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் படி, ஏவுகணைகள் மற்றும் நவீன ஆயுதங்கள் உக்ரைனுக்கு வழங்கப்பட உள்ளன.ஸ்பெயின் அதிகாரிகள், “போர் முடியும் வரை உக்ரைனுக்கு எங்கள் ஆதரவு தொடரும்” என உறுதி அளித்துள்ளனர்.