உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
25 பார்வைகள்

“மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலால் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை” என்று பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார்.

ஈரானிய மாலுமிகள் மீதான தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து எழுந்துள்ள பாதுகாப்புச் சந்தேகங்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
“இலங்கை எப்போதும் ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கைகள் மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டே செயற்படுகின்றது. தற்போதைய சூழலில் நாம் மனிதாபிமானத்துக்கே முதலிடம் வழங்கி வருகின்றோம். தேசிய பாதுகாப்புத் தொடர்பில் அரசு மிகுந்த பொறுப்புடன் செயற்பட்டு வருவதால், பொதுமக்கள் இது குறித்து எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.

அமெரிக்கத் தாக்குதலில் உயிரிழந்த ஈரானிய மாலுமிகளின் ஜனாஸாக்களை (உடல்களை) விரைவில் ஈரானுக்கு அனுப்பி வைப்பதற்கான இராஜதந்திர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மனிதாபிமான அடிப்படையில் இந்தச் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கு விவகாரங்களில் இலங்கை நடுநிலையைப் பேணுவதோடு, தனது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

70 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

74 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

58 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

81 0 0