உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

எதிரி சரணடைந்தால் கூட எவரும் சுடவே முடியாது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
35 பார்வைகள்

“சர்வதேச கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானியக் கப்பல் மாலுமிகளை மீட்டெடுத்ததன் மூலம், இலங்கை சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்ட மிகச் சரியான முடிவையே எடுத்துள்ளது.” – என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“இலங்கைக் கடற்பரப்புக்கு அப்பால் தாக்குதலுக்குள்ளான ஈரானியக் கப்பலில் இருந்தவர்களை இலங்கைக் கடற்படையினர் மீட்டெடுத்த நடவடிக்கை, சர்வதேச கடல்சார் சமவாயங்களுக்கு உட்பட்டது. இக்கட்டான சூழலில் கடலில் தத்தளிப்பவர்களைக் காப்பாற்றுவது ஒரு நாட்டின் தார்மீகப் பொறுப்பாகும்.

தாக்குதலுக்குள்ளான பகுதியில் ஓர் அமெரிக்கக் கப்பல் இருந்திருந்தால் கூட, சர்வதேச சட்டத்தின்படி அவர்கள் ஈரானியப் படையினரைக் காப்பாற்றியிருக்க வேண்டும். அதுவே சர்வதேச நியதியாகும்.

போர்க்களத்தில் எதிரணி சரணடைய முன்வந்தால் கூட, அவர்களைச் சுட்டுக்கொல்வதற்குச் சர்வதேச சட்டத்தில் இடமில்லை. அவ்வாறிருக்கையில், விபத்துக்குள்ளானவர்களைக் காப்பாற்றுவது கட்டாயமானதாகும்.

ஈரானியக் கப்பல் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் எடுத்த முடிவு சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட வேண்டியது. ஒருவேளை இலங்கை இந்த மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுக்கத் தவறியிருந்தால், சர்வதேச மட்டத்தில் கடும் விமர்சனங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருந்திருக்கும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

70 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

74 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

58 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

81 0 0