உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

ஓசை ரமணா தயாரிப்பில் உருவான ‘அந்தோனி’ திரைப்பட ஊடக – ஊரக சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
42 பார்வைகள்

உலக சினிமா நோக்கிய முனைப்பாக இலங்கைத்தீவின் தமிழர் தாயக கடல்வாழ் மக்களின் வாழ்வியலை கருப்பொருளாக கொண்டு உருவாகியுள்ள ‘அந்தோனி’ திரைப்படத்தின், பிரான்ஸ் திரையிடலுக்கான ஊடக மற்றும் ஊரக சந்திப்பு இடம்பெற்றது.

தலைநகர் பரிசின் தமிழர் வர்த்தக மைய பகுதியில் அமைந்துள்ள, சோதியாக கலைக் கல்லூரியில் மார்ச் 7ஆம் நாள் சனிக்கிழமை மாலை இச்சந்திப்பு இடம்பெற்றது.

‘அந்தோனி’ திரைப்படத்தின் பிரான்ஸ் விநியோகஸ்தர் பாரத் மதி, ‘அந்தோனி’ திரைப்படத்தில் நடித்த மூத்த கலைஞர்களான தயாநதி மற்றும் இரா. குணபாளன் ஆகியோர் உரையாடலை நிகழ்த்தியிருந்தனர்.

இதுவரை நிலத்திலும் புலத்திலும் வெளிவந்த திரைப்படங்களில் சில சில குறைபாடுகள் இருந்திருந்தாலும், ‘அந்தோனி’ திரைப்படம் அத்தனை விடயங்களை உள்ளடக்கிய ஒர் முழுநீளத் திரைப்படமென கருத்தினை தெரிவித்த பாரத் மதி அவர்கள், நாங்கள் ஜெயிச்சிட்டோம் என உற்சாகத்தினை தருகின்றது என குறிப்பிட்டிருந்தார்.

குருநகர், பாசையூர், நவாந்துறை, அல்லைப்பிட்டி என தனது தாயக வாழ்வியலை ‘அந்தோனி’ திரைப்படத்தை நினைவுபடுத்தி கருத்துரைத்த மூத்த கலைஞர் தயாநிதி அவர்கள், கடலோடிகளின் வாழ்வியலை இத்திரைப்படம் நகர்த்தியிருக்கின்றது என குறிப்பிட்டிருந்தார்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் அதிக பொருட்செலவில் உருவாக்கம் பெற்றுள்ளது இத்திரைப்படம். இனிவரும் காலங்களில் நல்ல திரைப்படங்களை தருவதற்கு காத்திருக்கின்றார்கள் என்ற நம்பிக்கையினை ‘அந்தோனி’ தருக்கின்றது என மூத்த கலைஞர் இரா.குணபாலன் அவர்கள் கருத்துரைத்திருந்தார்.

பிரான்சில் உள்ள பல்வேறு ஊர் சங்கங்களின் பிரதிநிதிகள் இச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த நிலையில், இத்திரைப்படத்தின் முன்னோட்டம் நம்பிக்கை தந்துள்ளதோடு தமது கடல்வாழ்வியலை நினைவுபடுத்துவதாக குறிப்பிட்டிருந்தனர்.

எதிர்வரும் மார்ச் 14ஆம் நாள் சனிக்கிழமை ‘அந்தோனி’ திரைப்படத்தின் முதல் சிறப்புக் காட்சி திரையிடலுக்கு, குடும்பமாக ஊராக அரங்கு நிறைந்த திரையிடலாக அமைய அனைவரும் ஒத்துழைப்போம் என சந்திப்பில் கலந்து கொண்ட அனைவரும் உறுதியளித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

69 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

73 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

57 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

80 0 0