சிரேஷ்ட ஊடகவியலாளர் சஜீவ விஜேவீர காலமானார்.!
சிரேஷ்ட ஊடகவியலாளர் சஜீவ விஜேவீர அவர்கள் தனது 51ஆவது வயதில் காலமானார்.
கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இயற்கை எய்தியுள்ளார்.
ஊடகத்துறையில் நீண்டகால அனுபவமிக்க அவர், தனது காத்திரமான பங்களிப்பின் மூலம் பலராலும் மதிக்கப்பட்ட ஒரு ஊடகவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் மறைவுக்கு ஊடக அமைப்புகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் தமது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.