உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

இலங்கையை விழுங்கும் உலகப் போர் நெருப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான மோதல் இலங்கைக் கடற்பரப்பு வரை வியாபித்துள்ள நிலையில், இது இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு ஈடுகட்ட முடியாத பேரழிவை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இந்த அபாய அறிவிப்பை விடுத்துள்ளார்.

அவரது உரையின் முக்கிய சாராம்சம் வருமாறு,
சர்வதேச கடற்பரப்பில் ஈரானியப் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டமை மற்றும் மற்றொரு கப்பல் இலங்கையில் தஞ்சமடைந்துள்ளமை என்பன, இலங்கையை அறியாமலேயே இந்த உலகளாவிய மோதலுக்குள் இழுத்து விட்டுள்ளது என்று சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இந்தியப் பெருங்கடல் என்பது எக்காலத்திலும் ஒரு அமைதி வலயமே. அது வல்லரசுகளின் இராணுவ மோதல்களுக்கான களமாக மாறுவதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது. ஏற்கனவே பொருளாதார ரீதியாகச் சிதைந்து போயுள்ள இலங்கை, இவ்வாறானதொரு போர் விரிவாக்கத்தைத் தாங்கும் நிலையில் இல்லை.” – என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானிய மாலுமிகளைப் பொறுப்பேற்பது ‘மனிதாபிமானப் பொறுப்பு’ என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ள நிலையில், இந்தச் சூழல் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கும் சர்வதேச உறவுகளுக்கும் பாரிய சவாலாக உருவெடுத்துள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எச்சரித்துள்ளார்.

மத்திய கிழக்கில் பற்றி எரியும் போர் நெருப்பு இப்போது இந்தியப் பெருங்கடல் வழியாக இலங்கை மக்களின் வாழ்வாதாரத்திலும் நேரடித் தாக்கத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளது. இந்தச் சீரற்ற போர்முறையை அனைத்துத் தரப்பினரும் உடனடியாக நிறுத்தி, பிராந்திய அமைதியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, ஈரானின் மூன்றாவது கப்பல் இந்தியாவின் கொச்சி துறைமுகத்தில் தஞ்சம் புகுந்துள்ளமை, இந்தப் பிராந்தியத்தின் பதற்ற நிலை எந்தளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது என்பதைக் கோடிட்டுக் காட்டுகின்றது என்றும் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

69 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

73 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

57 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

80 0 0