கொக்குவில் இந்துக் கல்லூரியை விட்டு வெளியேற்றப்படவுள்ள பல மாணவர்கள்.!
யாழ்ப்பாணம் வலயக் கல்வி அலுவலகத்தின் தகவல் அறியும் படிவத்திற்கான பதிலின் மூலம் வினா 3.3 இல் வினாவப்பட்டதற்கு அமைய மாணவர் தெரிவுப் பட்டியல் வலயக் கல்விப் பணிமனையின் அனுமதியுடன் மேற்கொள்ளப்படவில்லை எனவும் சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் மற்றும் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் மாணவர் தெரிவினை மேற்கொண்டு தெரிவுப் பட்டியலை வலயக் கல்வி அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஏற்கனவே வலயக் கல்விப் பணிப்பாளரின் அனுமதியின்றி உள்வாங்கப்பட்டு கற்றல் செயல்பாடுகள் இடம்பெற்று வரும் நிலையில் சுற்று நிருபத்தின்படி தெரிவுகள் மேற்கொள்ளப்படின் ஏற்கனவே தவறாக உள்வாங்கப்பட்டுள்ள மாணவர்களின் பெயர்கள் பட்டியலில் நீக்கப்படும் எனும் பொருள் வெளிப்படுகிறது. அதாவது அவர்கள் பாடசாலையில் இருந்து நீக்கப்படுவார்கள். தகுதி இருந்தும் வெளியே நிற்கும் மாணவர்கள் உள்ளீர்க்கப்படுவார்கள். இதில் தவறு யாருடையது? பாதிக்கப்படப்போகும் மற்றும் தகுதி இருந்தும் அனுமதி கிடைக்காமல் காத்திருக்கும் இச்சிறார்களின் நிலை என்ன? அவர்களின் உளவியல் தாக்கத்திற்கு சிறுவர் உரிமைகள், மனித உரிமைகள், வடமாகாண கல்வி திணைக்களம், JVP அரசாங்கம் கூறும் பதில் என்ன?
