ஹந்தானை தோட்டத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழா.!
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவும், மனித அபிவிருத்தி தாபனமும், ஹந்தானை தோட்ட நிர்வாகமும் இணைந்து நடத்திய சர்வதேச பெண்கள் தின விழா இன்று ஞாயிற்றுக்கிழமை ஹந்தானை தோட்டத்தில் நடைபெற்றது.
இதில் மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் தலைமை இயக்குநர் “வீர வனிதையர்” விருது பெற்ற திருமதி லோகேஸ்வரி சிவப்பிரகாசம், பிரதம இணைப்பாளர் பி. ஸ்ரீ காந்த் ஆகியோர் உள்ளிட்ட பல அதிதிகள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வை 25 இற்கும் மேற்பட்ட தொழிலாளர் அமைப்பு பெண்களும், தோட்டப் பெண்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தார்கள்.




