உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

சபையில் அனல் பறந்த மோதல்; வாயிருக்கின்றது என்பதற்காக வாய்க்கு வந்தபடி பேசாதீர்கள்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

நாடாளுமன்றத்தில் நேற்று சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் தலைவர் நேற்று நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தைப் பார்வையிடச் சென்றுள்ளமை குறித்துக் கருத்து வெளியிட்ட நளின் பண்டார, “கோப் குழுவின் தலைவர் என்பவர் ‘டோபி’ வேலை செய்வதற்காக நியமிக்கப்பட்டவர் அல்லர்” எனச் சாடினார்.

இதற்குப் பதிலளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க,
“வாய் இருக்கின்றது என்பதற்காக வாய்க்கு வந்தபடி பேச வேண்டாம். நாடாளுமன்றக் குழுக்களின் தலைவர்கள் மிகவும் பொறுப்புடன் செயற்படுகின்றனர். விசாரணைகளை முன்னெடுக்கவும், விடயங்களை ஆராயவும் அவர்களுக்குப் பூரண உரிமை உண்டு. அவர்கள் தவறு இழைத்தால் அதற்கான பொறுப்பை அவர்களே ஏற்க வேண்டும். அதை விடுத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம்.” – என்று கடுமையாகத் தெரிவித்தார்.

இதன்போது நளின் பண்டார மீண்டும் குறுக்கிட்டுப் பேச முயன்ற போதிலும், அவருக்கு ஒலிவாங்கி வழங்கப்படவில்லை. இதனால் சபையில் சிறிது நேரம் குழப்பம் நிலவியது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

67 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

73 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

57 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

80 0 0