உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

கழிவு முகாமைத்துவம் தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

வாழ்வியலும் சுகாதாரமும் என்ற அடிப்படையில் மஸ்கெலியா பிரதேச சபையால் நேற்று 06.03.2026 மஸ்கெலியா ரிக்காடன் பகுதியில் கழிவு முகாமைத்துவம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இந்த கலந்துரையாடல் மஸ்கெலியா பிரதேச சபை கௌரவ தவிசாளர் கந்தையா ராஜ்குமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

தற்போது அம்பகமுவ, மஸ்கெலியா, நல்லதண்ணீர், சாமிமலை போன்ற பகுதிகளில் இருந்து கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அதனை மேலும் மேம்படுத்தும் வகையில் ஹட்டன் பிரதேசத்தில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகளையும் ரிக்காடன் கழிவு முகாமைத்துவ மையத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், இந்த கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் உர வகைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குறைந்த விலையில் வழங்குவது குறித்தும் முக்கியமாக பேசப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் உதவி ஆணையாளர், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், மஞ்சுல சுரவீர ஆராய்ச்சி, மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார், உதவி தவிசாளர் மஸ்கெலியா பிரதேச சபையின் செயலாளர், சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டது சிறப்பம்சமாக அமைந்தது.

கடந்த பல ஆண்டுகளாக ஹட்டன் நகரில் உள்ள கழிவுகள் முகாமைத்துவத்தில் தீர்வு காண முடியாதுள்ளது. அதனைத் தீர்த்து வைக்கும் வகையில் ஹட்டன் நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளாந்தம் சேரும் உக்கும், உக்கா கழிவுகள் அனைத்தும் மஸ்கெலியா பிரதேச சபையின் கீழ் இயங்கும் ரக்காடு கிராமத்தில் அமைந்துள்ள கழிவுகள் தரம் பிரிக்கும் நிலையத்திற்கு பொறுப்பேற்பது என தீர்மானம் செய்யப்பட்டது.

இதனால் ஹட்டன் நகரில் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்ற உக்கும், உக்கா பொருட்களை அகற்றி ஹட்டன் நகரைச் சுத்தமாக வைத்துக் கொள்ள நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுரவீர ஆராய்ச்சி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

67 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

73 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

57 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

80 0 0