உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

கடலில் இனிமேல் தாக்குதல் நடைபெறாது என அமெரிக்காவிடம் பகிரங்க உறுதி பெறுங்கள்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
25 பார்வைகள்

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் இனிமேல் இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என்பதற்கான உத்தியோகபூர்வ உறுதியை அமெரிக்காவிடமிருந்து இலங்கை அரசு பெற்றுக்கொள்ள வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கட்சியின் தலைமையகம் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்துக்குள் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலொன்றினால் ஈரான் நாட்டுப் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டமை தொடர்பில், இலங்கை அரசு தொடர்ந்தும் மௌனம் காத்து வருகின்றமை கவலையளிக்கின்றது. அரசின் இந்த மௌனப் போக்கை ஐக்கிய தேசியக் கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.

இவ்வாறான மோதல் நடவடிக்கைகள் காரணமாக, இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயம் ஒரு ‘போர் வலயம்’ போல் மாற்றமடைந்துள்ளது. இது நாட்டின் வணிக நலன்களுக்குப் பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

மேலும், இவ்வாறான பதற்றமான சூழலால் சர்வதேச கப்பல் போக்குவரத்துச் செலவுகள் மற்றும் காப்புறுதிக் கட்டணங்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

இதன் நேரடி விளைவாக இலங்கையில் வாழ்க்கைச் செலவு மேலும் உயர்ந்து, நாட்டின் பொருளாதாரத்துக்குப் பாரிய பாதிப்புகள் ஏற்படும்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

67 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

73 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

57 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

80 0 0