உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

புழுக்களுடன் பொரித்த கோழி வழங்கிய கடை உரிமையாளருக்கு அபராதம் விதிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
40 பார்வைகள்

சுகாதார சீர்கேட்டுடன் உணவு வழங்கிய கடை உரிமையாளருக்கு ரூபா 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு சம்மாந்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது.

குறித்த வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை(6) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை கடை உரிமையாளரை கடந்த 13 மாதங்களுக்கு மேலாக நீடித்த சட்டப் போராட்டத்திற்குப் பின் குற்றவாளியாக இனங்கண்ட சம்மாந்துறை நீதவான் நீதிமன்று அவரது பொருளாதார நிலையை கருத்திற்கொண்டு ரூபா 15 ஆயிரம் அபராதம் விதித்து வழக்கினை முடிவிற்கு கொண்டுவந்துள்ளது.

கடந்த 2025 பெப்ரவரி 2 அன்று சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட கல்லரிச்சல் பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட சங்க ஒன்றுகூடலில் வழங்கப்பட்ட இரவு விருந்தில் பொரித்த கோழியில் புழுக்கள் இருந்தமை கண்டறியப்பட்டிருந்தது. அத்துடன் சம்பவ தினமன்று கடை உரிமையாளருடன் சங்க ஒன்று கூடலில் ஈடுபட்டவர்கள் தர்க்கம் செய்த நிலையில் பொதுச் சுகாதார பரிசோதகர் குழுவினருக்கு தகவல் வழங்கி இருந்தனர்.

இதற்கமைய சட்ட நடவடிக்கையை தொடர்ந்த சுகாதார தரப்பினர் கடந்த 13 மாதங்களுக்கு மேலாக நீடித்த சட்டப் போராட்டத்திற்குப் பின் குறித்த உணவு வழங்கிய நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் பின் கடையை மூடிவிட்டு தலைமறைவான வெளி ஊர் கடை உரிமையாளர் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளுக்கும் மூன்று முறை ஆஜராகாமல் தவிர்த்து வந்த நிலையில் இறுதியில் நீதிமன்ற பிடிவிறாந்து (Warrant) மூலம் அவர் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தார்.

அத்துடன் தான் நிரபராதி என வாதாட முற்பட்ட போதிலும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் குழுவினரின் வலுவான சாட்சியங்கள் மற்றும் அனுபவ ரீதியிலான சட்ட வாதங்களின் அடிப்படையில் அவரால் உண்மையை மறைக்க முடியாமல் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில் குற்றவாளியின் பொருளாதார நிலையை கருத்திற்கொண்டு ரூபா 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வழக்கு நிறைவு செய்யப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

66 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

56 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

79 0 0