கல்வி நிலைய வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் இயந்திரம் அன்பளிப்பு.!
2001ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள், தங்கள் 25ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, தாம் கல்வி பயின்ற அம்பாறை மாவட்டம் திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு ரூபாய் 2,53,000 பெறுமதியான போட்டோ பிரதியெடுக்கும் இயந்திரம் ஒன்றை வழங்கினர்.
இவ்வியந்திரம் 2026 மார்ச் 6ஆம் திகதி பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.இந்த நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.