பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசரநிலை நீடிப்பு.!
நாடாளுமன்றத்தில் இன்று (06) முக்கிய தீர்மானம் ஒன்று பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.அதன்படி, நாட்டில் நடைமுறையில் உள்ள அவசரகால நிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்க முன்வைக்கப்பட்ட பிரேரணை 100 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த பிரேரணைக்கு ஆதரவாக 108 வாக்குகளும், எதிராக 08 வாக்குகளும் அளிக்கப்பட்டன.பொது பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 81ஆம் பிரிவின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட இந்த பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமநாயக்க நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
மேலும், அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்ட தொடர்புடையபிரேரணையும் நாடாளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்பட்டது.