உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

அவசரகாலச் சட்டம் தேவையற்ற முறையில் பயன்படுத்தப்படவில்லை – பாதுகாப்பு பிரதி அமைச்சர்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
45 பார்வைகள்

அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை தேவையற்ற விதத்தில் பயன்படுத்தவில்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.பாராளுமன்றம் இன்று (06) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியபோது அவர் இதனை குறிப்பிட்டார்.


ஊழல் மிகுந்த நிலையிலிருந்த நாட்டையே தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்றதாகவும், இருப்பினும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.அத்துடன் நாட்டில் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படுவது அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.

தேசிய பாதுகாப்பு பாதிக்கப்பட்டதும், பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையிலும் நாட்டை பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


மேலும் டிட்வா சூறாவளியின் தாக்கம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவி வரும் யுத்த நிலைமையால் நாட்டிற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை கட்டுப்படுத்தி மக்களை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லும் நோக்கிலேயே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

66 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

55 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

79 0 0