உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

அவசரகாலச் சட்டத்தால் அடக்குமுறை நடந்திருந்தால் ஆதாரத்தை முன்வையுங்கள்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
46 பார்வைகள்

நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ள நிலையில், அதன் மூலம் ஏதேனும் அடக்குமுறைகள் இடம்பெற்றிருந்தால் அதனை ஆதாரங்களுடன் நிரூபிக்குமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய எதிர்க்கட்சியினருக்குச் சவால் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடிய வேளையில், எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,
“அடக்குமுறை, அடக்குமுறை என்று வெறும் வார்த்தைகளை மட்டும் கூறிக்கொண்டிருக்காமல், உண்மையில் எங்கே அடக்குமுறை நடந்தது என்பதை எங்களிடம் முன்வையுங்கள். கடந்த மூன்று மாத காலப்பகுதிக்குள் இந்தச் சட்டத்தின் கீழ் யாராவது கைது செய்யப்பட்டார்களா? அல்லது யாராவது அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டார்களா? அத்தகைய சம்பவங்கள் இருந்தால் அவற்றை விவரியுங்கள்.

மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய நாம் எதிர்க்கட்சியில் இருந்தபோது அவசரகாலச் சட்டத்தை எதிர்த்தோம். ஆனால், அந்தச் சந்தர்ப்பங்களில் அச்சட்டத்தின் மூலம் அடக்குமுறைகள் திட்டவட்டமாக அரங்கேற்றப்பட்டன. அதற்கான சாட்சிகளும் உதாரணங்களும் எங்களிடம் இருந்தன. அதன் அடிப்படையிலேயே நாம் அன்று எதிர்த்தோம்.

அவசரகாலச் சட்ட நீடிப்பானது ஜனநாயகத்துக்கு விடுக்கப்படும் சவால் என எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை.

அரசு சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தவே நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஆதாரங்களின்றி அரசியல் இலாபத்துக்காக அடக்குமுறை எனும் சொல்லைப் பயன்படுத்த வேண்டாம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

66 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

55 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

79 0 0