உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கையில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஊடுருவியதா?

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
49 பார்வைகள்

நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு, தேசிய பாதுகாப்பு உச்சக்கட்டத்தில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்துக்குள் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று நுழைந்ததா என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றம் இன்று சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியபோது, நாட்டின் கடல்சார் பாதுகாப்பு குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
“இலங்கையின் நிலப்பகுதியிலிருந்து 40 கடல் மைல்களுக்கு அப்பால், எமது பிரத்தியேக பொருளாதார வலயத்துக்குள் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று வந்திருந்தது உங்களுக்குத் தெரியாதா? ‘ஐரிஸ் டென்னா’ எனப்படும் ‘மௌட்ஜ் ரக’ போர்க்கப்பல் மீது, நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ‘மார்க் 48’ ரக ஏவுகணை ஏவப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய பாதுகாப்பு பலமாக இருப்பதாகக் கூறும் அரசிடம், 40 கடல் மைல் தொலைவில் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் வருவதைக் கண்டறியும் தொழில்நுட்பம் இல்லையா? எம்மிடம் மேற்பரப்பு ரேடார், சோனோபாய்ஸ், நீருக்கடியிலான சோனார் வலையமைப்புகள் அல்லது செயற்கைக்கோள் கண்காணிப்பு வசதிகள் இல்லையா?

கடலில் 208 பேர் காப்பாற்றப்பட்டமை பாராட்டுக்குரியது என்றாலும், அதற்கு முன்னதாக 130 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை கவலைக்குரியது. சம்பந்தப்பட்ட போர்க்கப்பல் இலங்கையின் 12 கடல் மைல் எல்லைக்குள் இருந்திருந்தால், அந்த 130 உயிர்களையும் காப்பாற்றியிருக்க முடியும்.

அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கும் சூழலில் இவ்வாறான ஊடுருவல்கள் நடப்பது, நாட்டின் தேசிய பாதுகாப்பு எந்த நிலையில் உள்ளது என்பதைக் காட்டுகின்றது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

66 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

55 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

79 0 0