உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மக்களால் முற்றுகை – முல்லையில் அதிரடி நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
38 பார்வைகள்

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு தொட்டியடி பகுதியில் இடம்பெற்று வந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நடவடிக்கையை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தினர்.அப்பகுதியில் சிலர் தொடர்ச்சியாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனை நிறுத்துமாறு பலமுறை எச்சரித்த போதிலும் அவர்கள் நடவடிக்கையை தொடர்ந்ததாக மக்கள் தெரிவித்தனர்.
இந்த சட்டவிரோத கசிப்பைப் பயன்படுத்தியதால் இளைஞர்கள் மத்தியில் குடும்பத் தகராறுகள் அதிகரித்ததுடன், வீதிப் போக்குவரத்துக்கும் இடையூறுகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல இளைஞர்கள் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று இளைஞர்கள் மற்றும் அப்பகுதி பொது அமைப்புகள் இணைந்து கசிப்பு உற்பத்தி நடைபெற்ற இடத்தை சுற்றிவளைத்தனர்.


அப்போது 600 லீற்றருக்கும் அதிகமான கோடா மற்றும் கசிப்பு என்பன மக்கள் கைப்பற்றியுள்ளனர்.பின்னர் கைப்பற்றப்பட்ட பொருட்களை புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

65 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0