உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

சுரேஷ் சலே கைது விவகாரம்: அடிப்படை உரிமை மீறல் மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதை சவாலுக்கு உட்படுத்தி, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இலங்கை விமானப்படையின் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். சுரேஷ் சலேயின் கைது சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரியே மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, தடுப்புக்காவலில் உள்ள சுரேஷ் சலேவின் பாதுகாப்பு குறித்து அவரது குடும்பத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர். அவரது உணவில் விஷம் கலந்து கொலை செய்யும் அபாயம் இருப்பதாக அச்சம் தெரிவித்து, வீட்டிலிருந்து சமைத்த உணவை வழங்க அனுமதி வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்கள வளாகத்துக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

65 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0