உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

இலங்கை கடற்பரப்பைத் தாண்டி மீன்பிடிக்க வேண்டாம் – மீனவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அனைத்து மீனவர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச கடற்பரப்பில் தற்போது நிலவும் அபாயகரமான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


உலகளவில் நிலவும் அமைதியற்ற சூழ்நிலையை முன்னிட்டு, சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடிக்கும் இலங்கை மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றது.இதன்போது கருத்து தெரிவித்த அவர், தற்போது கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் எக்காரணம் கொண்டும் சட்டவிரோத பயண வழிகளை பயன்படுத்தவோ அல்லது அறிமுகமற்ற கடற்பகுதிகளில் நுழையவோ கூடாது என வலியுறுத்தினார்.


மீனவ மக்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தமக்கு அனுமதிக்கப்பட்ட மற்றும் வழமையான கடல் பயண வழிகளையே பயன்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் கடலில் ஏதேனும் ஆபத்தான அல்லது அவசர நிலை ஏற்பட்டால், 24 மணி நேரமும் செயல்படும் MRCC நிலையத்தையோ அல்லது கடற்றொழில் திணைக்களத்தின் தகவல் தொடர்பு மையத்தையோ உடனடியாக தொடர்புகொள்ளுமாறு அனைத்து மீனவர்களும் படகு உரிமையாளர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

65 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0