உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

மஸ்கெலியா பகுதியில் கடும் பனிமூட்டம்; வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.அதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் கடும் குளிரான காலநிலையும் நிலவி வருகிறது. எங்கு பார்த்தாலும் அதிகளவில் பனிமூட்டம் காணப்படுவதால் பார்வைத் தூரம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதன் காரணமாக மலையகப் பகுதிகளில் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மற்றும் தனியார் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களின் மின்விளக்குகளை ஏற்றி மிகவும் அவதானத்துடன் வாகனங்களை இயக்குமாறு ஹட்டன் வலய காவல் துறை தலைமை அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் கினிகத்தேனை, தியாகலை, நோர்ட்டன் வழியாக சிவனடி பாத மலை நோக்கி பயணிக்கும் அனைத்து வாகனங்களும் மிகுந்த கவனத்துடன் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என போக்குவரத்து துறை அதிகாரிகளும் அறிவுறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

65 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

70 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0