உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

‘சரோஜா’ திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

‘சரோஜா’ திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.அம்பாறை பொலிஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக அம்பாறை பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல, அம்பாறை பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி, அம்பாறை உதவி பொலிஸ் மா அதிபர் 1 சம்பத் விக்ரமரத்ன, பொத்துவில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபுல் குணவர்தன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


நிகழ்வு அதிதிகள் வரவேற்புடன் தொடங்கி மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து சமய அனுஷ்டானங்களுடன் நிகழ்ச்சி இடம்பெற்றது.இதன்போது நிகழ்வின் நோக்கம் குறித்து அம்பாறை பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி உரையாற்றினார். தொடர்ந்து மாணவிகளின் நடன நிகழ்வு அரங்கேறியது.

மேலும் அம்பாறை பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல, சமூக சேவைகளில் பொலிஸாரின் பங்களிப்பு குறித்து விரிவாக உரையாற்றினார்.இந்நிகழ்வில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் அதிதிகளால் வழங்கப்பட்டதுடன், பொலிஸ் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சிகளும் சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.இவ்வாறு பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நிகழ்வு சிறப்பாக நிறைவுற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

65 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

70 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0