மிக வேகமாக சீரமைக்கப்படும் மலையக புகையிரத பாதைகள்.!
பதுளை முதல் நானுஓயா வரை உள்ள புகையிரத பாதைகளில் அம்பேவல முதல் நானுஓயா வரை உள்ள புகையிரத வீதியில் தாழிறக்கம் நிலவிய பகுதிகள் மிகவும் கடினமான முறையில் செப்பனிடும் பணியில் புகையிரத நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மத்திய மலைநாட்டில் கண்டி முதல் பதுளை வரை உள்ள புகையிரத மார்க்கங்களில் பாரிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டது.
இதன் காரணமாக மலையக புகையிரத சேவைகள் தடைபட்டுள்ளது.
இதனை சீரமைக்கும் பணியில் புகையிரத நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
