உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பைக் கண்டு அஞ்சுகின்றதா இலங்கை அரசாங்கம்?

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

“அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தியுள்ள தாக்குதல் குறித்து அரசின் தெளிவான நிலைப்பாடு என்ன? அமெரிக்க அதிபரைக் கண்டு இந்த அரசு அஞ்சுகின்றதா?” – என்று எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை உரையாற்றிய போதே அவர் இந்தக் காரசாரமான கேள்விகளை முன்வைத்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

“ரம்ழான் நோன்பு என்பது இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் மக்களுக்கு மிக முக்கியமான ஒரு ஆன்மீகக் கடமையாகும். எமது சக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கூட நோன்பு நோற்ற நிலையில் தான் இங்கு சமூகமளித்துள்ளார். இவ்வாறானதொரு புனிதமான காலப்பகுதியிலேயே, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர்.

ஈரான் மக்கள் நோன்பு நோற்றிருந்த தருணத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்கத் தலைவரே இதனை முன்னின்று செய்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஒரு சண்டியரைப் போலவே செயற்படுகின்றார். அனைத்து நாடுகளையும் ஆக்கிரமிக்கும் நடவடிக்கையிலேயே அவர் ஈடுபட்டு வருகின்றார்.

இந்த விவகாரத்தில் இலங்கை அரசின் நிலைப்பாடு என்ன என்பதைத் தைரியமாக வெளிப்படுத்த வேண்டும். மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) இன்று எதிர்க்கட்சியில் இருந்திருந்தால் என்ன நேர்ந்திருக்கும்? இப்போது அவர்கள் அமைதி காக்கின்றார்கள். அமெரிக்க ஜனாதிபதியைக் கண்டு இந்த அரசாங்கம் அச்சப்படுகின்றதா?.” – என்றும் ரோஹித அபேகுணவர்தன கேள்வி எழுப்பினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

65 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

70 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0