உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

கட்டாரிலுள்ள இலங்கையர்கள் உடனடியாக பதிவு செய்யுங்கள்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய பாதுகாப்பற்ற சூழலைக் கருத்தில்கொண்டு, கட்டாரில் வசிக்கும் அனைத்து இலங்கைப் பிரஜைகளும் தங்களைப் பற்றிய விவரங்களை உடனடியாகத் தூதரகத்தில் பதிவு செய்யுமாறு கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பில், இதற்காக வழங்கப்பட்டுள்ள ‘கூகுள் படிவத்தை’ பூர்த்தி செய்வதன் மூலம் இலங்கையர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்தியத்தில் ஏதேனும் அசாதாரண சூழல் ஏற்படும் பட்சத்தில், இலங்கையர்களுடன் விரைவான தொடர்புகளைப் பேணுவதற்கு இந்தத் தரவுகள் உதவும் எனவும், அவசர வெளியேற்றம் அல்லது பாதுகாப்புத் திட்டங்களை முன்னெடுக்கும்போது தூதரகத்தின் ஒருங்கிணைப்புப் பணிகளை இது இலகுபடுத்தும் எனவும் கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் சார்ந்த விடயங்களை உறுதிப்படுத்த இவ்வாறான தரவுச் சேகரிப்பு மிக அவசியம் எனவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மத்திய கிழக்கில் ஈரான் – இஸ்ரேல் பதற்றம் மற்றும் கடல்சார் அனர்த்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கை அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

எனவே, கட்டாரில் தங்கியுள்ள இலங்கையர்கள் தாமதமின்றி இந்தப் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

65 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

70 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0