உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

காணாமல்போன யாழ். மீனவர்கள் தமிழகத்தில் கரை ஒதுங்கினர்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
35 பார்வைகள்

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை – ஊரணி கடற்பரப்பில் இருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன இரண்டு மீனவர்கள், ஏழு நாட்களின் பின்னர் தமிழ் நாட்டின் அரியமான் கடற்பரப்பில் வைத்து இந்தியக் கடலோரக் காவல் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை தொழிலுக்காகக் கடலுக்குச் சென்ற இந்த மீனவர்களின் படகு, நடுக்கடலில் இயந்திரக் கோளாறு காரணமாகப் பழுதடைந்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த படகு, கடல் நீரோட்டத்தினால் இந்தியக் கடல் எல்லைக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்திய எல்லைக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த யாழ். மீனவர்களை அவதானித்த தமிழக மீனவர்கள், தமது விசைப்படகு மூலம் அவர்களை இழுத்துச் சென்றுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீரை வழங்கிய தமிழக மீனவர்கள், பின்னர் அவர்களை இலங்கை கடல் எல்லை வரை கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளனர்.

எனினும், பலத்த கடல் அலையின் காரணமாக மீனவர்களின் படகு மீண்டும் இந்தியக் கடல் எல்லைக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. இந்தநிலையில், கடலில் காணாமல்போய் ஏழு நாட்களின் பின்னர், இன்று வியாழக்கிழமை தமிழ்நாட்டின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் மேற்படி மீனவர்கள் இருவரும் கரை ஒதுங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த இந்தியக் கடலோர காவல் படையினர் மீனவர்களைப் பொறுப்பேற்றுள்ளதுடன், அவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

65 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

70 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0