உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

கல்முனையில் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய செயற்றிட்டம் முன்னெடுப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
25 பார்வைகள்

அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் போதைப்பொருளுக்கெதிரான செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அதன் ஓரங்கமாக கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்றிட்ட நிகழ்வுகள் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி. எம்.பளீல் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை (2026.03.01 முதல் 2026.03.07 வரை) முன்னிட்டு, இன்று தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் றாசிக் நபாயிஸ் ஒருங்கிணைப்பில் பொதுமக்களிடையே வலுவான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் போது “விற்கின்ற-அடிமையான அனைவருக்குமான அறிவித்தல்”- அகன்று செல்” எனும் வாசகத்தினை மையமாகக் கொண்டு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், முச்சக்கர வண்டிகளில் ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன.

பொதுமக்களுக்கு போதைப்பொருள் ஆபத்துக்கள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன் வாகனங்களில் ‘போதை ஒழிப்பு’ ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

மேலும் அரச அலுவலகங்கள், மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

போதைப்பொருள் இல்லாத, ஆரோக்கியமான இளம் சமூகத்தை உருவாக்குவதே நமது இலக்கு. இந்த வாரம் முழுவதும் தொடரும் இந்தப் பிரச்சாரத்தில் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பங்கேற்பதன் மூலம், நம் பிரதேசத்தை போதைப்பொருள் அற்ற சூழலாக மாற்ற முடியும். போதை ஒழிப்பு – நமது பொறுப்பு!இளைஞர்களைப் பாதுகாப்போம்! சமூகத்தைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் மார்ச் மாதம் 01 முதல் ‘முழு நாடும் ஒன்றாக, தேசிய செயற்திட்டத்துடன் இணைந்து போதைப்பொருள் தடுப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்வில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான ஏ.எல்.ஏ. வாஹிட் உட்பட பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

64 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

70 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0