உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

பொலிஸாரைத் தாக்கிய பாரவூர்தி சாரதி கைது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

ஆபத்தான முறையில் பாரவூர்தியைச் செலுத்திய நபரைக் கைது செய்யச் சென்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கி, அவர்களின் சீருடையைக் கிழித்ததாகக் கூறப்படும் பாரவூர்தி சாரதி ஒருவரைக் கைது செய்துள்ளதாகக் களுத்துறை தெற்குத் தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாகல பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பலாத்தொட்ட வீதியிலிருந்து கட்டுக்குருந்த நோக்கி பாரவூர்தியைச் செலுத்திய போது நாகொட சந்தியிலுள்ள வீதித்தடையில் பொலிஸார் வழிமறித்துச் சோதனையிட்ட போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் பின்னரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர் மேற்கொண்ட கத்திக்குத்துத் தாக்குதலில் அதிகாரி ஒருவரின் இடது கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

64 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

70 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0