உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

எரிபொருள் விநியோகம் தொடர்பாக மன்னாரில் அவசர கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
25 பார்வைகள்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை முன்னிட்டு, எரிபொருள் முகாமைத்துவத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் அவசரக் கூட்டம் ஒன்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று புதன்கிழமை மதியம் நடைபெற்றது.மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், உருவாகியுள்ள நெருக்கடியை கருத்தில் கொண்டு எரிபொருள் விநியோக நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.


விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்தில் கொண்டு, போக்குவரத்து மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் தொடரும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மன்னார் மாவட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், கூட்டுறவு அபிவிருத்தி அதிகாரிகள், பலநோக்கு கூட்டுறவு சங்கத் தலைவர்கள், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள், கமநல அபிவிருத்தி அதிகாரிகள் உள்ளிட்ட பல துறைச் சார்ந்த அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தற்போதைய நிலைமையை முன்னிட்டு எரிபொருள் விநியோகம் சீராக நடைபெறுவதற்கான சில முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

64 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

68 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0