உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

ஹோர்முஸ் நீரிணை முடங்கினால் இலங்கைக்கு எரிபொருள் கிடைக்குமா?

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு ஸ்திரமின்மை, இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசிடம் விளக்கங்களையும் கோரினார்.

“மத்திய கிழக்கின் பல்வேறு நாடுகளில் (சவூதி, ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், குவைத், ஓமான், பஹ்ரைன், இஸ்ரேல், லெபனான்) பணிபுரியும் இலங்கையர்களின் துல்லியமான எண்ணிக்கை எவ்வளவு?

போர் உக்கிரமடைந்தால், அவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற விசேட விமான போக்குவரத்து அல்லது மாற்று வழிமுறைகள் தயார் நிலையில் உள்ளனவா?

தூதரகங்களில் 24 மணிநேர அவசர தொடர்பு சேவைகள் மற்றும் தங்குமிடம், மருத்துவ வசதி வழங்கும் அலகுகள் உள்ளனவா?

ஹோர்முஸ் நீரிணை கடல்வழிப் பாதை பாதிக்கப்பட்டால், இலங்கைக்கான கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்ய மாற்று வழிகள் என்ன?

உலகச் சந்தையில் எரிபொருள் விலை உயர்வால் ஏற்படக்கூடிய பொருளாதாரத் தாக்கத்தை முகாமைத்துவம் செய்ய பிற எண்ணெய் உற்பத்தி நாடுகளுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளதா?

வான்பரப்பு மூடப்பட்டதால் வெளிநாட்டு விமான நிலையங்களில் சிக்கியுள்ள இலங்கையர்களின் பாதுகாப்புக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவை?

சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்று ஏற்பாடுகள் என்ன?

வெளிநாடுகளில் இருந்து வரும் அந்நியச் செலாவணி குறையும் அபாயம் உள்ளதா? அதனைத் தடுக்க அரசு வகுத்துள்ள திட்டம் யாது?

தேயிலை ஏற்றுமதி மற்றும் கப்பல் போக்குவரத்துக்கான காப்புறுதி அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்புகளை அரசு எவ்வாறு கையாளப் போகின்றது?” – என்று அரசிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வினவினார்.

சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிலிருந்து நாம் எரிபொருளைப் பெற்றாலும், அந்த நாடுகளுக்கே ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் கச்சா எண்ணெய் செல்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாஸ, இந்த விநியோகச் சங்கிலி குறித்த பூரண தெளிவுடன் அரசு செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

64 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

68 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0