உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

மட்டக்களப்பில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
26 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் வீதம் வெகுவாக குறைவடைந்துள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் இ.உதயகுமார் தெரிவித்தார்.

தொடர்ச்சியான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின்கீழ் இன்று காலை மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் சுகாதாரத் திணைக்களம், மட்டக்களப்பு மாநகர சபை, இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், பொதுச் சுகாதார பரிசோதர்கள் இணைந்து மேற்கொண்ட பாரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின்போது 870 வீடுகளில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன இதில் 370 இடங்களில் இடங்கள் டெங்கு பரவும் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டதுடன் 109 இடங்களில் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த இடங்கள் உடனடியாக தூய்மைப்படுத்த வேண்டும் என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததுடன் தூய்மைப்படுத்தப்படாத இடங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

15 குழுக்களாக பிரிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 50க்கும் மேற்பட்ட பொதுச் சுகாதார பரிசோதர்கள் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

64 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

68 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0