நாட்டு மக்களின் நலன் வேண்டி விசேட யாக பூஜை.!
திருக்கோவில் தாமரைக்குளம் சீரடிசாய் கருணாலயத்தில் நாட்டு மக்களின் நலன்வேண்டி விசேட யாகம் இடம்பெற்றது.
சீரடிசாய் கருணாலயத்தின் ஸ்தாபகர் திருமதி சீதா விவேக் ஒழுங்கமைப்பில் 210 சித்தர்களின் ஆசீர்வாதம் மற்றும் நாட்டு மக்களின் நலன் வேண்டிய இவ் விசேட யாக பூஜையினை கதிர்காமம் கபிலவத்தை யோகி கோபிநாத் சித்தர் தலைமையில் நடைபெற்றது.
இவ் யாகபூசையில் நாட்டின் பல இடங்களிலும் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். இங்கு இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட 108 தெய்வீக மூலிகைகள் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ் யாகத்தில் பல அடியவர்கள் கலந்து கொண்டர்.
அதனை தொடர்ந்து சித்தரின் ஆசி உரையும் இடம்பெற்றது.

