உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

எந்தவொரு மோதலின் போதும் மக்களின் பாதுகாப்பு பாதிக்கப்படக்கூடாது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
40 பார்வைகள்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் மோதல்களில் பொதுமக்கள் காயமடைந்துள்ளதை சுட்டிக்காட்டிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, எந்தவொரு இராணுவ நடவடிக்கை அல்லது மோதலின்போதும் பொதுமக்களின் பாதுகாப்பு பாதிக்கப்படக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள நாமல் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
கட்டடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது ஈரானிய ஆயுதப் படைகளால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஏவுகணை தாக்குதல்களில் சிக்கி மத்திய கிழக்கில் பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

பொதுமக்கள் பலர் ஒளிந்துகொள்ளவும் தஞ்சமடையவும், பாதுகாப்பான இடம் தேடிச் செல்வதாக கூறப்படுகிறது.

எந்தவொரு இராணுவ நடவடிக்கை அல்லது மோதலின்போதும் பொதுமக்களின் பாதுகாப்பு ஒருபோதும் பாதிக்கப்படக்கூடாது.

மேலும், மத்திய கிழக்கு உட்பட பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளிலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து தரப்பினரையும் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

மத்திய கிழக்குப் பகுதிகள் இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், தற்போது ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் அங்கு பணிபுரிகின்றனர்.

அந்தப் பகுதிகளுக்கான வலுவான இராஜதந்திர உறவுகளை இலங்கை பேணிவருகிறது.

எனவே, வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை எங்களுக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம்.

எந்தத் தூண்டுதலும் இல்லாமல் பொதுமக்கள், பொருளாதார நிலையங்கள் மற்றும் முக்கியமான உட்கட்டுமானங்களை குறிவைத்து நடத்தும் எந்தத் தாக்குதலும் ஏற்க முடியாதது.

இதுபோன்ற செயல்கள் நிலைதடுமாற்றத் தன்மையை மேலும் தீவிரப்படுத்தி, உலகம் முழுவதும் குழப்பத்தையும் அச்சத்தையும் பரப்புகின்றன என நாமல் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

64 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

68 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0