வடமராட்சியில் இன்றும் எரிபொருள் நிரப்புவதற்கு நீண்ட வரிசை..!
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் இன்றும் எரிபொருள் நிரப்புவதற்கு நீண்ட வரிசையில் மக்கள் தமது வாகனங்களுடன் காத்திருக்கின்றனர்.
இன்று காலை முதல் வடமராட்சியில் எங்கும் எரிபொருள் இல்லாத நிலையில் நேற்று பிற்பகலில் இருந்து மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மட்டும் எரிபொருள் வழங்கப்படுகிறது.
கிராமக்கோடு, குஞ்சர்கடை, துறைமுகம் போன்ற எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் இல்லை. இதனால் மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
