உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

கட்டுநாயக்கவிலிருந்து துபாய் நோக்கி புறப்பட்டது முதலாவது விமானம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிய போர் மோதல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அதற்கமைய, இன்று (03) பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய் நோக்கி முதல் விமானம் புறப்பட்டுச் சென்றது.


ஃபிட்ஸ் எயார் நிறுவனத்துக்குச் சொந்தமான 8D 821 என்ற விமானம் இன்று பிற்பகல் 1.20 மணியளவில் கட்டுநாயக்கவிலிருந்து துபாய் நோக்கி புறப்பட்டது என விமான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். இதில் 47 பயணிகளும் 10 விமான பணியாளர்களும் பயணித்தனர்.


மத்திய கிழக்கு வான்வெளி குறிப்பிட்ட காலத்திற்காக திறக்கப்பட்டுள்ளதால், அந்த இடைப்பட்ட நேரத்தில் விமானங்கள் மீண்டும் இயக்கப்படுகின்றன.இதற்கிடையில், ஏர் அரேபியா நிறுவனத்துக்குச் சொந்தமான G-9509 என்ற விமானம் இன்று மாலை 4.45 மணியளவில் கட்டுநாயக்கவிலிருந்து சார்ஜா நோக்கிப் புறப்பட்டது. இதில் 44 பயணிகளும் 10 பணியாளர்களும் பயணித்தனர்.எதிர்வரும் நாட்களில் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான ஏனைய விமான சேவைகளும் படிப்படியாக வழமை நிலைக்கு திரும்பும் வாய்ப்பு உள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

63 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

67 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

52 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

74 0 0