உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

வருடத்தின் முதல் சந்திர கிரகணம் இலங்கையில் தென்பட்டது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

புத்தளம் மாவட்டம் உடப்பு கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் இந்து ஆலயத்தின் முன்பாக, மாலை சுமார் 6.35 மணியளவில் இந்த அரிய வானியல் நிகழ்வைக் காணக்கிடைத்தது. பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் இதைக் கவனித்தனர்.இந்நிலையில், கிரகணம் நிறைவடைந்த பின்னரே ஆலயத்தில் வழமையான பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.


சூரியன், பூமி மற்றும் நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைந்தபோது, பூமியின் நிழல் நிலவின் மீது படுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.இது முழு சந்திர கிரகணமாக இருந்தபோதிலும், நிலவு அடிவானத்திற்குக் கீழ் அமைந்திருந்ததால், இலங்கையில் இது பகுதி சந்திர கிரகணமாகவே தென்பட்டது.


வானம் தெளிவாகவும் மேகமூட்டமின்றியும் இருந்தால், கிழக்கு திசை அடிவானம் தெளிவாகத்தெரியும் உயரமான அல்லது திறந்தவெளி பகுதிகளில் இருந்து இந்தக் காட்சியைக் காண முடியும் என ஆர்தர் சி. கிளார்க் மையத்தின் தலைவர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்திருந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

63 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

67 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

52 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

74 0 0