உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

மட்டக்களப்பில் தொழிற்கல்வி நிறுவகங்களுடன் கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாம் நிலை கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களுடன் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ். ராஜ்பாபு அவர்களின் ஏற்பாட்டில், பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (03) இடம்பெற்றது.


மூன்றாம் நிலை கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட அரச மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில், சமுர்த்தி மற்றும் அஸ்வசும திட்டங்களின் பயனாளர்களின் பிள்ளைகளுக்காக என்.வி.க்யூ மூன்றாம் மற்றும் நான்காம் நிலை சான்றிதழ் கற்கை நெறிகள் நடத்தப்பட்டு வருகின்றன.


இவ்வருடம் (2025) என்.வி.க்யூ மூன்றாம் மற்றும் நான்காம் நிலை கனரக வாகன இயக்குநர் பயிற்சி நெறியை வெற்றிகரமாக முடித்த சமுர்த்தி மற்றும் அஸ்வசும பயனாளர்களின் பிள்ளைகளுக்கு சான்றிதழ்கள்இந்நிகழ்வில் அரசாங்க அதிபர் அவர்களால் வழங்கப்பட்டன.
மேலும், எதிர்வரும் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கற்கை நெறிகள் தொடர்பாகவும் இக்கலந்துரையாடலில் விரிவாக பேசப்பட்டது.


இந்தப் பயிற்சி நெறிகள் துறையில் நிபுணத்துவம் பெற்ற பயிற்றுநர்களால் வழங்கப்படுவதால், பயிற்சியை முடிக்கும் நபர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் நிலை உருவாகும். இதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரமும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிகழ்வில் மாவட்ட சிரேஷ்ட சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் ஏ. எம். அலி அக்பர், தொழிற்கல்வி மற்றும் பயிற்சி அதிகார சபை, தேசிய தொழிற்பயிற்சி அதிகார சபை உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள், தனியார் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

63 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

67 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

52 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

74 0 0