ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் சென்ற பேருந்து விபத்து.!
ஹபரணை – பொலன்னறுவை பிரதான வீதியின் மின்னேரியா பகுதியில் இன்று (03.03.2026) இடம்பெற்ற பாரிய சாலை விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றும், அதே நேரத்தில் பயணித்த மற்றொரு பேருந்தும், நெல் அறுவடை இயந்திரத்தை ஏற்றிச் சென்ற உழவு வண்டியுடன் மோதியதில் இந்த மும்முனை விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் பேருந்துகளில் பயணித்தவர்கள் உள்ளிட்ட மொத்தம் 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக ஹபரணை மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த விபத்து காரணமாக ஹபரணை–பொலன்னறுவை வீதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மின்னேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.